உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம்

எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம்

கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் விலாயத் புத்தா என்கிற திரைப்படம் வெளியானது. எழுத்தாளர் இந்துகோபன் எழுதிய நாவலை தழுவி உருவான இந்த படத்தை ஜெயன் நம்பியார் இயக்கியுள்ளார். பிரித்விராஜிற்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் திலகனின் மகன் ஷம்மி திலகன் வயதான கதாபாத்திரத்தில் நடித்தார். பிரித்விராஜிற்கும் இவருக்கும் இடையேயான ஒரு ஈகோ யுத்தம் தான் இந்த படத்தின் கதை. சந்தன மர வியாபார பின்னணியில் இதன் கதை அமைந்துள்ளது.

படம் 2 மணி நேரம் 56 நிமிடம் ஓடும் விதமாக வெளியானது. முதல் நாள் வரவேற்பு பெற்றாலும் சனி, ஞாயிறு கிழமைகளில் படத்தின் வசூல் குறைந்தது. இதற்கு காரணம் படத்தின் நீளம் அதிகம் என சோசியல் மீடியாவில் எதிர்மறை விமர்சனங்கள் நிறைய பகிரப்பட்டன. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தில் இருந்து 15 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு திங்கள்கிழமையிலிருந்து புதிய பிரிண்ட் திரையிடப்பட்டுள்ளது.

ரசிகர்களின் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு படத்தின் நீளத்தை குறைத்துள்ளதாக கூறியுள்ள தயாரிப்பாளர், சந்தீப் சேனன், அதே சமயம் இந்த படத்திற்கு வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்மறை விமர்சனங்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் அதில் சில யுடியுப் சேனல்கள் மீதும் சைபர் கிரைமில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !