ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன்
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான ராஜு ராமலிங்கம் என்பவரின் மகள் நேகா மந்தேனா. இவரது திருமணம் இவர்களின் பூர்வீக பகுதியான ராஜஸ்தானில் சமீபத்தில் நடைபெற்றது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான கதிராஜுவை இவர் திருமணம் செய்தார். அமெரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபர் என்பதால் இந்த திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மகனான ஜூனியர் ட்ரம்ப் தனது மனைவியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மேலும் இந்திய திரையுலகை சேர்ந்த பல பிரபல நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் நடிகர் ராம்சரண் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரை தேடி வந்த ஜூனியர் ட்ரம்ப் அவருடன் நீண்ட நாள் பழகியவர் போல தோளில் கை போட்டுக்கொண்டு நீண்ட நேரம் பேசி உள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது..