'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம்
இந்த ஆண்டில் உலக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஹாலிவுட் படம் 'அவதார்: பயர் அண்ட் ஆஷ்'. முந்தைய இரண்டு பாகங்களின் வெற்றி மற்றும் சாதனை வசூல்களுக்குப் பிறகு இந்த படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த படத்தில் சாம் வொர்திங்டன் (ஜேக் சல்லி) மற்றும் ஜோ சல்டானா (நெய்திரி) உள்ளிட்ட கதாபாத்திரங்கள் மீண்டும் வருவதோடு புதிய கதாபாத்திரங்களும் அறிமுகமாகிறது. கதையின் புதிய நடிகர்களில் ஊனா சாப்ளின், 'ஆஷ் பீப்பிள்' குலத்தின் தலைவரான வராங்காக நடிக்கிறார்
ஜேம்ஸ் கேமரூனின் புகழ்பெற்ற அறிவியல் புனைகதை சீரிஸின் மூன்றாவது பாகமான 'அவதார்: பயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
பட வெளியீட்டிற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், புக் மை ஷோ செயலியில் 10 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றனர்.
வருகிற டிசம்பர் 19ம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.