ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா'
ADDED : 4 minutes ago
'ஜோ, ஆண் பாவம் பொல்லாதது' படங்களின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் ரியோ ராஜ், அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கும் தனது 6வது படத்தில் நடிக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள படக்குழு, படத்திற்கு 'ராம் இன் லீலா' என பெயரிட்டுள்ளனர்.
வர்திகா எனும் புதுமுக நடிகை நாயகியாக நடிக்கிறார். அங்கித் மேனன் இசையமைக்கிறார். படத்தில் பூனையும் முக்கிய ரோலில் நடிப்பதாக கூறுகின்றனர். காதல், காமெடி ஜானரில் உருவாகும் இதன் படப்பிடிப்பு இன்று துவங்கியது.