உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபலங்கள் பட்டியல் 2025: தமிழ் நடிகர்கள், நடிகைகளுக்கு இடமில்லை…

பிரபலங்கள் பட்டியல் 2025: தமிழ் நடிகர்கள், நடிகைகளுக்கு இடமில்லை…


சர்வதேச அளவில் திரைப்படங்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய 'ஐஎம்டிபி' என அழைக்கப்படும் 'இன்டர்நெட் மூவி டேட்டாபேஸ்' இணையதளம் 2025ம் ஆண்டில் இந்திய சினிமாத் துறையில் பிரபலமான நடிகர்கள், நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் நடிகர்கள், நடிகைகள் யாரும் இடம் பெறவில்லை.

2025ம் ஆண்டில் அதிக அளவில் எந்த பிரபலத்தின் பக்கங்கள் அதிக அளவில் பார்க்கப்பட்டதோ அதை வைத்து இந்தத் தரவுகளை வெளியிட்டுள்ளார்கள். அதன்படி முதல் இரண்டு இடங்களை இந்த ஆண்டில் 'சாயாரா' படத்தின் அறிமுக நடிகரான அஹான் பாண்டே முதலிடத்தையும், அறிமுக நடிகையான அனீத் பாண்டா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார்கள்.

3வது இடத்தில் அமீர்கான், 4வது இடத்தில் இஷான் கட்டர், 5வது இடத்தில் லக்ஷயா, 6வது இடத்தில் ராஷ்மிகா மந்தனா, 7வது இடத்தில் கல்யாணி பிரியதர்ஷன், 8வது இடத்தில் திரிப்தி டிம்ரி, 9வது இடத்தில் ருக்மிணி வசந்த், 10வது இடத்தில் ரிஷப் ஷெட்டி உள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளட்ட யாரும் இந்த அதிகப் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற முடியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !