ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா
ADDED : 4 minutes ago
'டூரிங் டாக்கீஸ், டோரா, ஹர ஹர மகாதேவகி, செம்ம, மோகினி, ஐங்கரன்' உள்ளிட்ட படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தவர் காயத்ரி ரேமா. 'ராஜா, போலீஸ் டைரி, கண்ணாம்பூச்சி, முகிலன்' போன்ற வெப்சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் நுழைந்து, ஜீ தமிழ் சேனலின் டான்ஸ் ஜோடி டான்ஸ் இறுதிச்சுற்று போட்டியாளர் ஆனார். தற்போது 'சுப்பன்' என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
ஆனந்த முருகன் பாலஹாசன், ஸ்ரீ தேவா, யாசர், ஷர்மிஷா மற்றும் ஸ்வாதி எஸ். பிள்ளை ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் குகனேசன் சோனைமுத்து இயக்கி உள்ளார். ஸ்ரீ பகவான்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஆர். ஆனந்தமுருகன் தயாரித்துள்ளார். படம் நாளை (டிச.,5) வெளியாகிறது.