உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா

திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா


தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் முதன் முதலில் இணைந்து நடித்த போதே அவர்களது ஜோடிப் பொருத்தம் பற்றி அதிகம் பேசப்பட்டது. ராஷ்மிகாவுக்கும், கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டிக்கும் 2017ம் ஆண்டே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், ஒரு வருடத்திற்குப் பிறகு அவர்கள் திருமண நிச்சயத்தை முறித்துக் கொண்டனர்.

அதன்பின் தெலுங்கில் பிரபலமாகி அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்து, ஹிந்தி வரை சென்றுவிட்டார் ராஷ்மிகா. தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க ஆரம்பித்ததும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது என கடந்த சில வருடங்களாகவே கிசுகிசு உள்ளது. சமீபத்தில் இருவரும் திருமண நிச்சயம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. இருந்தாலும் இருவரும் இதுவரை தங்களது காதல் பற்றியோ, திருமண நிச்சயம் பற்றியோ வெளிப்படையாகவோ, அதிகாரப்பூர்வமாகவே எதையும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் குறித்த கேள்வி ஒன்றிற்கு, “நான் திருமணத்தை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ விரும்பவில்லை. அதைப் பற்றி பேச வேண்டிய சமயத்தில், நாங்கள் பேசுவோம்,” என்று கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக விஜய், ராஷ்மிகா திருமணம் பிப்ரவரி 2026ல் நடக்க உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !