ஜனநாயகன் படத்தின் ஹிந்தி தலைப்பு 'ஜன் நேத்தா'
ADDED : 58 days ago
வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்காலிகமாக அவரது கடைசி படமாக அறிவித்து நடித்துள்ள படம் 'ஜனநாயகன்' . இதில் வில்லன் கதாபாத்திரத்தில் பாபி தியோல் நடித்துள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜனநாயகன் படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதியன்று திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தை ஹிந்தி மொழியில் டப்பிங் செய்து 'ஜன் நேத்தா' என்கிற தலைப்பில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் விநியோகம் செய்கின்றனர் என விஜய், பாபி தியோல் இருவரும் உள்ள அதிரடியான போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.