உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : தோல்வி படத்தை வெற்றிப்படமாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ்

பிளாஷ்பேக் : தோல்வி படத்தை வெற்றிப்படமாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ்


'அலிபதுஷா' என்ற கதை 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற ஒரு கதை. ஒரு நவாப், அவரது குடும்பம் மற்றும் அவரது ஒழுக்கக்கேடான சகோதரனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றிய பிரபலமான கதையாகும்.

இந்தக் கதை 1930களில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. ஆனால் அந்த காலத்திலேயே அந்த படம் தோல்வியை தழுவியது. அதன் தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்டதாக கூட சொல்வார்கள்.

இதே கதையை மாடர்ன் தியேட்டர் ஆர்.சுந்தரம் மீண்டும் திரைப்படமாக எடுக்க விரும்பினார். முன்பு இந்த படம் ஏன் தோல்வியடைந்தது என்பதை பற்றி ஆய்வு செய்தார். கதை திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து மீண்டும் அந்த கதையை படம் ஆக்கினார். அதுதான் 'பாசவலை' 1957ம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அன்றைய காலகட்டத்தில் வசூலை வாரி குவித்த படமாகவும் அமைந்தது.

இந்த படத்தில் எம்.கே. ராதா, ஜி.வரலட்சுமி, எம்.என். ராஜம், வி.கோபாலகிருஷ்ணன், வி.கே. ராமசாமி, அ.கருணாநிதி, டி.பி. முத்துலட்சுமி, குமாரி ராஜாமணி, தி.க. ராஜேஸ்வரி, பாக்யம், எம்.ஆர்.சந்தானம், எஸ்.எம். திருப்பதிசாமி, எம்.என். கிருஷ்ணன், சாயிராம், 'மாஸ்டர்' பாஜி, 'மாஸ்டர்' வெங்கடேஷ், 'ஜெயக்கொடி' கே.நடராஜன் உள்பட பாலர் நடித்தனர். ஏ எஸ் நாகராஜன் இயக்கினார், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !