உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'புஷ்பா 2' சாதனையை முறியடித்த 'துரந்தர்'

'புஷ்பா 2' சாதனையை முறியடித்த 'துரந்தர்'

இந்தியத் திரையுலகத்தில் 2025ம் ஆண்டில் 1000 கோடி படங்களே வரவில்லை என்று இருந்த ஏக்கத்தை கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் வெளிவந்த ஹிந்திப் படமான 'துரந்தர்' தீர்த்து வைத்தது.

இந்திய அளவில் இதுவரையில் வெளியான படங்களில், இப்படம் தற்போது அதிக வசூலைக் குவித்த படங்களில் நம்பர் 1 என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பு 830 கோடிகளுடன் 'புஷ்பா 2' படம் முதலிடத்தில் இருந்தது. தியேட்டர்களில் மொத்தமாக ஓடிய நாட்களில் பெற்ற வசூல் அது. அதை 33 நாட்களில் முறியடித்துள்ளது 'துரந்தர்'.

இன்னும் 'துரந்தர்' படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால், அந்த வசூல் தொகை இன்னும் அதிகரிக்கலாம். உலக அளவில் மொத்தமாக 1300 கோடியை நோக்கி அதன் வசூல போய்க் கொண்டிருக்கிறது. இதனால், அடுத்து 'துரந்தர் 2' படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !