சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல்
ADDED : 3 days ago
தற்போதைய இளைய தலைமுறை நடிகைகளில் ஸ்ரீ லீலா சிறந்த நடன கலைஞர்களில் ஒருவராக இருக்கிறார். தெலுங்கு படங்களில் அதிரடியான நடனமாடி இளவட்ட ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீ லீலா வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ''அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா-2 படத்தில் இடம் பெற்ற 'கிஸ்ஸிக்' என்ற பாடல் எனக்கு நாடு தழுவிய ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது. எனது சினிமா கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பாடலாகவும் அது அமைந்தது. அந்த பாடலுக்கு பிறகு தான் தமிழில் 'பராசக்தி', ஹிந்தியில் மூன்று படங்களில் கமிட்டானேன். எதிர்காலத்தில் இதுபோன்ற சிறப்பு பாடல்களுக்கு நடனமாடுவதை தவிர்க்க போகிறேன். அதேசமயம் அழுத்தமான நடிப்பை பதிவு செய்யக்கூடிய கதாபாத்திரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்போகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ரீ லீலா.