உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமரன் தாய்நாட்டுக்காக... பராசக்தி தாய்மொழிக்காக... : சிவகார்த்திகேயன்

அமரன் தாய்நாட்டுக்காக... பராசக்தி தாய்மொழிக்காக... : சிவகார்த்திகேயன்

சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்துள்ள ‛பராசக்தி' படம் இன்று வெளியாகி உள்ளது. தணிக்கை சான்றிதழ் தாமதத்தால் வருமா, வராதா என்ற சூழலில் நேற்று யுஏ பெற்று படம் வெளியாகிவிட்டது.

சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி : ‛‛மொழி பிரச்னைக்காக அந்தக்காலத்தில் மாணவர்கள் எப்படி போராடினர் என்பதை இந்தக்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக இந்த படம் உருவாகி உள்ளது. நான் இதுவரை கண்டிராத ஒரு பிரஷரை இந்த படத்தில் சந்தித்தேன். திருச்சியில் இருந்தபோது தணிக்கையில் டயலாக் மாற்ற சொல்லி உள்ளார்கள் என படக்குழு கூறியது. போனில் டயலாக் பேசி அனுப்பி வைத்தேன். இந்த படம் யார் மனதையும் புண்படுத்தாது.

நான் அன்று சொன்னது தான், விஜயை எப்போதும் என் அண்ணனாகவே பார்க்கிறேன். இது அண்ணன், தம்பி பொங்கல் தான். அவர் படமும் வந்திருந்தால் மகிழ்ச்சி. நான் அரசியல் பண்ண வரல, தணிக்கை வாரியம் அவர்களின் கடமையை செய்துள்ளனர். எதிர்காலத்தில் எஸ்ஜே சூர்யா மாதிரியான வில்லன் ரோல் அமைந்தால் பண்ணலாம். அமரன் தாய்நாட்டுக்காக, பராசக்தி தாய்மொழிக்காக நடித்த படம். அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடிக்கிறேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

மோகன்
2026-01-10 14:43:30

திராவிடர்களுக்கா