வாசகர்கள் கருத்துகள் (2)
Only Nayagan is remembered still.
உழவன் மகன் தான் டாப்
1980களில் இறுதி பகுதியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் மூவரும் தான் முன்னணியில் இருந்தார்கள். மூன்று பேரும் நடித்த படங்கள் 1987ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி வெளியானது. ரஜினி நடித்த 'மனிதன்', கமல் நடித்த 'நாயகன்', விஜயகாந்த் நடித்த 'உழவன் மகன்'. மூன்று படங்களும் களத்தில் இறங்கியது. 3 ஹீரோக்களின் ரசிகர்களும் திருவிழாபோல் வெளியீட்டை கொண்டாடினார்கள். 3 படங்களுமே பெரிய வெற்றி பெற்றது. இதில் மனிதன் மட்டும் 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.
'உழவன் மகன்' படத்தை ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கினார். மனோஜ் கியான் இசை அமைத்தார். ராதிகா, நம்பியார், மலேசியா வாசுதேவன் உள்பட பலர் நடித்தனர். இது விஜயகாந்தின் சொந்தப் படம். எம்ஜிஆரே படத்தைப் பாராட்டியுள்ளார். விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
'மனிதன்' படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ரூபினி, ரகுவரன், ஸ்ரீவித்யா, டெல்லிகணேஷ், சோ, வினுசக்கரவர்த்தி என பலர் நடித்துள்ளனர். ரூபினி இந்த படத்தில்தான் அறிமுகமானார். ரகுவரனின் வில்லன் நடிப்பு பேசப்பட்டது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த மாஸ் படம் 'நாயகன்'. சரண்யா, ஜனகராஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம்.
'உழவன் மகன்' கிராம புறங்களிலும், நாயகன் நகர்புறங்களிலும், மனிதன் அனைத்து ஏரியாவிலும் கலெக்ஷனை அள்ளியது.
Only Nayagan is remembered still.
உழவன் மகன் தான் டாப்