உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமைச்சர் வாக்குறுதி ; வேலை நிறுத்தத்தை கைவிட்ட மலையாள திரையுலகம்

அமைச்சர் வாக்குறுதி ; வேலை நிறுத்தத்தை கைவிட்ட மலையாள திரையுலகம்


கேரள திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி உடன் சேர்த்து வசூலிக்கப்படும் அதிகப்படியான கேளிக்கை வரியை நீக்குவது, திரையரங்குகளுக்கு என விதிக்கப்படும் மின்சார கட்டணத்தை முறைப்படி குறைத்து ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை கேரள அரசிடம் தொடர்ந்து மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம், விநியோகஸ்தர் சங்கம் ஆகியவை வலியுறுத்தி வந்தன.

ஆனால் அவற்றில் ஒரு முடிவு எட்டப்படாத நிலையில் ஜனவரி 22ம் தேதி ஒட்டுமொத்த திரையுலகமும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது கேரளா பிலிம் சேம்பர் தலைவர் அனில் வி தாமஸை அழைத்து கேரளா கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் இவர்களது குறைகளை நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளதன் பேரில் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தை மலையாள திரையுலகம் கைவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !