அமிதாப்பச்சன் வீட்டில் தங்க கழிப்பறையா : பரபரப்பு கிளப்பிய பாலிவுட் நடிகர்
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் வீட்டில் தங்க கழிப்பறை இருப்பதாக பாலிவுட் நடிகர் விஜய் வர்மா தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். இந்த விஜய் வருமா நடிகை தமன்னாவின் முன்னாள் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது.
80 வயதை தாண்டிய பிறகும் அவர் படங்கள், டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் என தொடர்ந்து நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் அமிதாப்பச்சன். 1600 கோடி ரூபாய் சொத்துக்களுடன் இந்திய அளவில் பணக்கார நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அமிதாப் பச்சன். இதனால் விஜய் வர்மாவின் தகவல் உண்மையாக இருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
அமிதாப் பச்சனுடன் ஒரு படத்தில் நடித்தபோது அவர் வீட்டுக்கு சென்று இருக்கிறார் விஜய் வர்மா. அப்போது அமிதாப் வீட்டில் தங்கத்தில் டாய்லெட் இருப்பதை பார்த்து அவர் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார். உடனே அங்கேயே நின்று விஜய் வர்மா செல்பியும் எடுத்துக்கொண்டார். அதனையே இப்போது அவர் பகிர்ந்துள்ளார்.
விஜய வர்மா பகிர்ந்து இருப்பது தங்க டாய்லெட் அல்ல தங்க கலர் பூசிய டாய்லெட் என்று அமிதாபச்சன் ரசிகர்கள் பதிலளித்து வருகிறார்கள்.