வாசகர்கள் கருத்துகள் (1)
ஒரு படமும் வராமலிருந்தால் நல்லது
நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் அவர் மீது குறையாக சொல்லும் ஒரே விஷயம் அவர் அதிகமான படங்கள் நடிப்பதில்லை, சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு செல்லாமல் இருப்பது என குறைகளாக கூறப்படுகிறது. இருந்தாலும் மாநாடு படத்திற்கு அவரிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதாக சொன்னார்கள். ஆனாலும் படங்கள் ஆண்டுக்கு ஒன்று வருவதே ஆச்சர்யமாக உள்ளது. கடந்தாண்டு அவரது நடிப்பில் நான்கு படங்களின் அறிவிப்பு வெளியானது.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் நடிப்பவர் அதை முடித்ததும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். தற்போது சிம்பு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளாராம். இனி ஒரு வருடத்தில் மூன்று அல்லது நான்கு படங்கள் நடிக்கலாம் என திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு படமும் வராமலிருந்தால் நல்லது