உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா நடித்துள்ள 'கருப்பு' படத்தின் பிரீ பிசினஸ் 110 கோடி!

சூர்யா நடித்துள்ள 'கருப்பு' படத்தின் பிரீ பிசினஸ் 110 கோடி!


ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'கருப்பு'. அவருடன் திரிஷா, சுவாசிகா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைத்திருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே வந்த நிலையில், தற்போது மே 14ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஏரியா உரிமை குறித்த வியாபாரம் இன்னும் தொடங்கப்படாத நிலையில், டிஜிட்டல் பிசினஸ் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முதல் கட்டமாக 110 கோடி வரை இந்த படத்தின் டிஜிட்டல் வியாபாரம் நடைபெற்றதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. கருப்பு படத்தின் மொத்த பட்ஜெட்டே 130 கோடி என்ற நிலையில், தற்போது பிரீ பிஸ்னஸிலேயே இந்த படம் 110 கோடி வசூலித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !