அர்ஜுன் தாஸின் ‛கான் சிட்டி' படத்தை கைபற்றிய நெட்பிளிக்ஸ்
ADDED : 1 days ago
நடிகர் அர்ஜுன் தாஸ் ஒரு புறம் கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார். மறுபுறம் பெரிய படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த வரிசையில், ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து 'கான் சிட்டி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ், மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் கே.எல் அவுட் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இப்போது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், இதன் உரிமை ரூ. 9 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளது.