உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பாகுபலி 2' வசூலை முறியடித்த 'துரந்தர் 2'

'பாகுபலி 2' வசூலை முறியடித்த 'துரந்தர் 2'

ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா மற்றும் பலர் நடிப்பில் 2017ம் ஆண்டில் வெளிவந்த படம் 'பாகுபலி 2'. இந்தியத் திரைப்பட வசூலில் சில புதிய சாதனைகளை அந்தப் படம் அப்போது படைத்தது.

முதல் வார முடிவில் 'பாகுபலி 2' படம் மொத்தமாக சுமார் 850 கோடி வசூலித்ததாகத் தகவல். அந்த சாதனையை 6 நாள் வசூலில் 'துரந்தர் 2' படம் முறியடித்து 900 கோடியை நெருங்கி விட்டதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும், குறிப்பாக அமெரிக்காவிலும் 'துரந்தர் 2' படத்திற்கு தினமும் ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் வசூல் கிடைத்துள்ளது. அரபு நாடுகளில் படம் வெளியாகி இருந்தால் அதன் மொத்த வசூல் சாதனை 'புஷ்பா 2' படத்தை மிஞ்சியிருக்கும் என்கிறார்கள்.

'புஷ்பா 2' படம் முதல் வார வசூலில் 1000 கோடியைப் பெற்றிருந்தது. அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !