சான்வே மேக்னாவின் புதிய படம்
ADDED : 1 days ago
மாவீரன், 3பிஎச்சே படங்களை தயாரித்த சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா, தற்போது இன்னும் தலைப்பு வைக்கப்படாத தனது புதிய படத்தை தயாரித்து வருகிறார். பாரத், சான்வே மேக்னா நடிக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.
'குடும்பஸ்தன்' படத்திற்கு பிறகு சான்வே மேக்னா நடிக்கும் படம் இது. குடும்பஸ்தன் வெற்றி பெற்றாலும் அடுத்து சரியான வாய்ப்பு அமையாமல் இருந்த சான்வே மேக்னாவுக்கு இந்த படம் அமைந்துள்ளது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்ட காலக்கட்டத்திற்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.