காதல் அழகானது, பிரிவும் அழகானது : அனுபமா பரமேஸ்வரன்
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன். அவருக்கும் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமிற்கும் இடையே காதல் இருந்ததாகவும், பின்னர் அவர்கள் பிரிந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இருவருமே அவர்களது காதலைப் பற்றி வெளிப்படையாகப் பேசியதில்லை.
கடந்த ஜூலை மாதம் அனுபமா அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிறகுதான் இருவரும் பிரிந்துவிட்டதாகத் தெரிய வந்தது. அந்தப் பதிவிலும் அவரது காதலர் யார் என்பதைக் குறிப்பிடாமலேயே, “இன்று நிம்மதி என்னைத் தேடி வந்தது,” என்று ஆரம்பித்த நீண்ட பதிவு அது.
அனுபமா தெலுங்கில் நடித்துள்ள 'கிரேஸி கல்யாணம்' படம் இந்த வாரம் அக்டோபர் 16ம் தேதி வெளியாகிறது. அப்படத்திற்கான புரமோஷன் பேட்டி ஒன்றில் காதல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அனுபமா, “காதல் அழகானது. பிரிவும் கூட அழகானதுதான்... அதை நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதையும், அதிலிருந்து எப்படி உணர்ந்து கொள்கிறீர்கள் என்பதையும் பொறுத்தது,” என்று கூறியுள்ளார்.