50 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ஜெயிலர் 2' டிரைலர்
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' இன்னும் சில தினங்களில் அக்டோபர் 15ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த வாரம் அக்டோபர் 5ம் தேதி வெளியிட்டார்கள்.
டிரைலர் வெளியாகி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையிலும் யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. யு டியூப் தளத்தில் தமிழ் டிரைலர் 20 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு டிரைலர் 8.3 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தி டிரைலர் 11 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. மொத்தமாக 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இரண்டு நாட்கள் முன்பு முன்பதிவு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் 2டி, எச்டிஆர், ஐமேக்ஸ் 2டி, டால்பி சினிமா 2டி, எபிக் ஆகிய வடிவங்களில் தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது.