உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு

25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு

தமிழ் சினிமாவில் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக எந்த ஒரு வெற்றிப் படத்தையும் கொடுக்காத ஒரு நாயகனாக சூர்யா இருந்தார். அவரது படங்கள் 100 கோடி வசூலைக் கடப்பதும், இரண்டு வாரங்களைத் தாண்டி ஓடுவதும் பெரிய விஷயமாக இருந்தது. அந்தக் குறையை கடந்த மாதம் வெளிவந்த 'கருப்பு' படம் போக்கியுள்ளது.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடித்து வெளிவந்த இந்தப் படம் தற்போது 25வது நாளைக் கடந்துள்ளது. இன்னமும் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் 300 கோடி வசூலைக் கடந்து சூர்யாவுக்கு முதல் 300 கோடி என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுத் தந்தது.

இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் ஆகியோருக்கு சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார்களை பரிசாக வழங்கினார் சூர்யா. இயக்குனருக்கு கார் பரிசளிப்பாரா அல்லது இன்னும் மதிப்பு மிக்க பரிசை வழங்குவாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

இந்நிலையில் ஜூன் 12ம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !