செப்டம்பரில் துவங்கும் தனுஷ், மாரி செல்வராஜ் படம்
ADDED : 15 hours ago
இயக்குனர் மாரி செல்வராஜ், வேல்ஸ் நிறுவன தயாரிப்பில், நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படம் தள்ளிப்போன காரணத்தால் ‛மஞ்சனத்தி' என்ற படத்தை இயக்க களமிறங்கிவிட்டார். இதற்கு இளையராஜா இசையமைக்கிறார். அதேசமயம் கர படம் தோல்வியால் வேல்ஸ் நிறுவனம் தனுஷின் அடுத்த படத்தை தொடர தயக்கம் காட்டுவதாகவும், அதனால் தனுஷ், மாரி படம் கைவிடப்பட்டதாகவும் சினிமா வட்டாரத்தில் செய்தி பரவியது. ஆனால், தற்போது கிடைத்த தகவலின் படி, தனுஷ், மாரி செல்வராஜ் படம் கைவிடப்படவில்லை, தள்ளித்தான் போய் உள்ளது. படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.