கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி விட்டீர்கள்; தேசிய விருது பெற்ற மம்முட்டிக்கு கமல் வாழ்த்து
ADDED : 2 days ago
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 72வது தேசிய விருதுகளில், நடிகர் மம்முட்டிக்கு கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'பிரம்மயுகம்' படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மம்முட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன், மம்மூக்கா என்று அழைத்து தனது வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளார்.
அதில், தேசிய விருதுகளின் எண்ணிக்கையில் என்னை முந்தி விடுவேன் என்று ஒருமுறை என்னிடம் வாக்குறுதி அளித்தீர்கள். எப்போதும் போலவே நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி விட்டீர்கள் என் நண்பனே.. இன்னும் பல விருதுகளைக் குவியுங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நான்காவது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மம்முட்டி பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.