முதல்வர் மகன் இயக்கிய 'சிக்மா' ரிலீஸ் தேதி அறிவிப்பு
முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய 'சிக்மா' படம் அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ் என, படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் பரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ் உட்பட பலர் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கிறார்.
கடந்த ஜூலை 31ல் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால், விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் ஜூலை 23ல் ரிலீஸ் ஆனதால் சிக்மா படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. செப்டம்பர் 18ம் தேதி வெளியாகலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், அக்டோபர் 2ம் தேதி சிக்மா ரிலீஸ் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் யஷ் நடித்த 'டாக்சிக்' வருகிறது. செப்டம்பர் மாதம் சூரியின் 'மண்டாடி' உட்பட பல படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளன. அதனால், தியேட்டர், வியாபாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிக்மா அக்டோபர் 2ம் தேதிக்கு தள்ளிப்போய் உள்ளது.