உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அருள்நிதியின் ‛வேட்டை சாமி' படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியீடு

அருள்நிதியின் ‛வேட்டை சாமி' படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியீடு

கடந்த 2023ல் வெற்றி நடிப்பில் வெளியான பம்பர் என்ற படத்தை இயக்கியவர் செல்வகுமார். இவர் தற்போது வேட்டை சாமி என்ற படத்தை இயக்குகிறார். அருள்நிதி நாயகனாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் அறிமுக வீடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தின் அறிமுக வீடியோவைப் பார்க்கும்போது, கருப்பசாமி கோயில் திருவிழாவை மையமாகக் கொண்டு கதையில் உருவாக இருப்பது தெரிகிறது. இதில் அருள்நிதி, கருப்பசாமி ஆடை உடுத்தியிருப்பதோடு, அதே கெட்டப்பில் ஒரு சண்டைக்காட்சியில் நடித்திருப்பதும் இடம் பெற்றுள்ளது.

ஏற்கனவே அஜய் ஞானமுத்து இயக்கிய டிமான்டி காலனி படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த அருள்நிதி, தற்போது அப்படத்தின் மூன்றாம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 10ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார், குரு சோமசுந்தரம், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங் களில் நடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !