உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டொரோன்டோ விழாவில் 'டோரதி' பிரிமீயர் நிறைவு : எழுந்து நின்று கைதட்டிய பார்வையாளர்கள்

டொரோன்டோ விழாவில் 'டோரதி' பிரிமீயர் நிறைவு : எழுந்து நின்று கைதட்டிய பார்வையாளர்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டோரதி'.

செப்டம்பர் 25ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ள இப்படத்தின் பிரிமீயர் காட்சி, கனடா நாட்டின் டொரோன்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் சில மணி நேரங்களுக்கு முன்பு நிறைவடைந்துள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டவர்கள் இந்த பிரிமீயர் காட்சியில் கலந்து கொண்டுள்ளனர்.



படத்தைப் பார்த்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றதாக தயாரிப்பு நிறுவனம் குழு புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளது. டோரதியின் அழகான பயணம் ஆரம்பமாகிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். படத்தைப் பார்த்த பின்பு உரையாடிய அனைவருக்கும் தங்களது நன்றியையும் தெரிவித்துள்ளார்கள்.

கனடா செல்வதற்கு முன்பாக தயாரிப்பாளர்கள், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !