ஜேம்ஸ்பாண்ட் நடிகை டான்யா ராபர்ட்ஸ் மரணம்
ADDED : 1734 days ago
80களில் கனவு கன்னியாக இருந்த ஹாலிவுட் நடிகை டான்யா ராபர்ட்ஸ். முதலில் மாடலாக விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தவர், போர்ஸ்ட் என்ட்ரி என்கிற திகில் படத்தின் மூலம் 1975ஆம் ஆண்டு திரையுலகில் நுழைந்தார். எ வியூ டு எ கில் என்கிற ஜேம்ஸ் பாண்ட் படத்தின் மூலம் புகழ்பெற்றார். இவர் நடித்த தட் 70ஸ் ஷோ என்கிற தொலைக்காட்சித் தொடரும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
65 வயதாகும் டான்யா கடந்த கிறிஸ்துமஸ் அன்று நடைபயிற்சி சென்றபோது மயங்கி விழுந்தார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி டான்யா இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே அவர் இருந்ததாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.