மேலும் செய்திகள்
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
1727 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
1727 days ago
கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு புதிய சீரியல்களை தொடங்குவதில் மும்முரமாக இருக்கிறது விஜய் டி.வி. அந்த வரிசையில் கடந்த திங்கட் கிழமை முதல் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் பாவம் கணேசன்.
இதில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நவீன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் நேகா கவுடா, ஆனந்த் பாண்டி, மீனாட்சி முரளி, சயம்யுக்தா உள்பட பலர் நடிக்கிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
பாவம் கணேசனின் கதை இதுதான் : குடும்பத்திற்காக தன் சந்தோஷத்தை மறந்து அதிகம் உழைக்கும் ஒரு இளைஞரை பற்றியது தான் கதை. தனது பெரிய குடும்பத்தை தனியாக உழைத்து காப்பாற்றி வருகிறார் கணேசன். பேப்பர் போடுவது முதல் இன்சூரன்ஸ் ஏஜென்ட், வாடகைக்கு வீடு பார்த்து கொடுக்கும் புரோக்கர் தொழில் வரை அனைத்து வேலைகளையும் செய்கிறார்.
கணேசனுக்கு ஒரு தம்பி, இரண்டு தங்கை மற்றும் ஒரு அக்கா இருக்கின்றனர். அக்கா திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு சென்றுவிட்டாலும் அவளும் கஷ்டமான ஒரு வாழ்க்கைதான் வாழ்கிறாள். ஒரு தங்கை நர்ஸ் ஆவதற்காக படித்து கொண்டிருக்கிறார். தம்பி ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். கணேசனுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அவரது அப்பா விட்டுச் சென்ற வீடு மட்டும்தான். அதற்கும் உள்ளூர் பெண் தாதா மூலம் பிரச்சினை வருகிறது. பிரச்சினைகளை சமாளித்து கணேசன் குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.
1727 days ago
1727 days ago