உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா

அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா

இந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த அந்தாதுன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.. மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்த படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் நடிகர் பிரசாந்த் நடிக்கிறார். இதன் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நிதின் நடிக்க, இந்த படத்தை மேர்லபகா காந்தி இயக்குகிறார். ந்தப்படம் மலையாளத்திலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்குகிறார். .

இதன் மலையாள ரீமேக்கில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் உன்னி முகுந்தன் மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். .இந்தநிலையில் இந்தப்படத்தில் நடிகை ராஷி கண்ணாவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் மோகன்லாலின் 'வில்லன்' படத்தில் நடித்ததன் மூலம் மலையாளத்தில் அறிமுகமான ராஷி கண்ணாவுக்கு இது அங்கே இரண்டாவது படம்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்.,-27ல் துவங்கும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !