மேலும் செய்திகள்
எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா
1686 days ago
ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ?
1686 days ago
இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி'
1686 days ago
கடந்த ஆண்டு அக்டோபரில் தனது பத்தாண்டு காதலரான கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். அதையடுத்து மாலத்தீவிற்கு சென்று ஹனிமூன் கொண்டாடி விட்டு மும்பை திரும்பியவர், ஐதராபாத்தில் நடைபெற்ற சிரஞ்சீவியின் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது தனது கணவருடன் அந்த ஸ்பாட்டிற்கு வந்து அனைவரையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும், இந்தியன்-2, ஹேய் சினாமிகா ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், தற்போது குலேபகாவலி பட இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தில் ராதிகா சரத்குமாரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் ஸ்பாட்டில் இருந்தபோது ராதிகாவும், காஜல் அகர்வாலும் இணைந்து ஒரு போட்டோ எடுத்துள்ளனர். அந்த போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராதிகா சரத்குமார், அழகான புதிய மணமகளான காஜல் அகர்வாலுடன் பணியாற்றுவதில் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். இதற்கு காஜல் நன்றி தெரிவித்துள்ளார்.
1686 days ago
1686 days ago
1686 days ago