உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்பு வெளியிட்ட நெகிழ்ச்சியான வீடியோ

சிம்பு வெளியிட்ட நெகிழ்ச்சியான வீடியோ

ஈஸ்வரன் படத்தை அடுத்து மாநாடு, பத்துதல படங்களில் நடித்து வரும் சிம்பு, தனது வாழ்வின் அற்புதமான தருணங்கள் குறித்த வீடியோ, போட்டோக்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது தனது அம்மா உஷா ராஜேந்தர் தனக்கு சாப்பாடு ஊட்டும் ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் சிம்புவின் தங்கை இலக்கியாவின் மகனான ஜேசன், ''ஏன் அவர் உங்களுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார்'' என்று கேட்கிறார். அதற்கு சிம்புவோ, உன் அம்மா உனக்கு ஊட்டி விடுவதைப்போன்று என் அம்மா எனக்கு ஊட்டி விடுகிறார் என்று பதில் சொல்கிறார்.

சிம்புவின் இந்த நெகிழ்ச்சியான வீடியோவை சிம்புவின் ரசிகர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் வைரலாக்கி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !