ஜிம்மில் சேர்ந்த ரகசியத்தை உடைத்த சமந்தா
ADDED : 1821 days ago
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா, தனது உடற்பயிற்சி வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது பிட்னெஸ் ரகசியம் குறித்தும் பேசுகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சாட்டிங் செய்த சமந்தா, தான் ஜிம்மில் இணைந்தது ஏன் என்பது குறித்த ரகசியத்தையும் போட்டு உடைத்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “யாருக்கும் சொல்லாத ரகசியத்தை இங்கே உங்களிடம் சொல்கிறேன்.. நான் ஏன் ஜிம்மில் இணைந்தேன் தெரியுமா..? ஏனென்றால் என் கணவர் நாகசைதன்யாவும் இந்த ஜிம்மிற்கு வருவது தான் வழக்கம். அவர் இங்கே என்ன செய்கிறார் என சோதனை செய்வதற்காகவே நானும் இந்த ஜிம்மில் இணைந்துள்ளேன்” என ரசிகர்களிடம் ஜாலியாக கூறியுள்ளார் சமந்தா.