உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரகசிய திருமணமா? - சனம் ஷெட்டி பதில்

ரகசிய திருமணமா? - சனம் ஷெட்டி பதில்

பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை சனம் ஷெட்டி. இவரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி போட்டியாளரான தர்ஷனும் காதலித்து வந்தனர். ஆனால் நிச்சயதார்த்தம் நடந்த பிறகு அவர்களது திருமணம் நின்றது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே நெற்றி வகிடில் குங்குமம் வைத்து காணப்பட்டார். இப்போது நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னரும் சமயங்களில் அதுபோன்று காணப்படுகிறார்.

இதுப்பற்றி ஒரு ரசிகர் சோசியல் மீடியாவில் சனம் ஷெட்டியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, எல்லாருமே இதே கேள்வியைத்தான் கேட்கிறார்கள். ஆனால் எனக்கு இப்போது வரை திருமணம் நடைபெறவில்லை. உங்கள் அனைவரது ஆசீர்வாதத்துடன் கண்டிப்பாக ஒருநாள் நடக்கும். மேலும் எங்கள் வீட்டில் திருமணமான பெண்கள் மட்டுமின்றி மற்ற பெண்களும் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பது வழக்கமான ஒன்று தான் என்றும் பதிலளித்து திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சனம் ஷெட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !