உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கில் அடுத்த முக்கிய வெளியீடுகள்

தெலுங்கில் அடுத்த முக்கிய வெளியீடுகள்

கொரானோ ஊரடங்கிற்குப் பிறகு அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் அடுத்தடுத்து இந்தியா முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இருந்தாலும் பொங்கல் முதல் தான் தென்னிந்தியாவில் பெரிய படங்கள் வெளியாகி மக்களை தியேட்டர்களுக்கு வரவழைத்தன. மக்களும் கொரானோ பயத்தை மீறி தியேட்டர்களுக்கு வர ஆரம்பித்தார்கள். அந்த உற்சாகத்தில் அடுத்தடுத்து பல வெளியீடுகளை தெலுங்குத் திரையுலகத்தில் அறிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

சில முக்கிய படங்களின் வெளியீட்டுத் தேதிகள்...

பிப்ரவரி 12 - உப்பெனா

பிப்ரவரி 26 - ஏ 1 எக்ஸ்பிரஸ், கபடதாரி

மார்ச் 26 - அரன்யா

ஏப்ரல் 9 - வக்கீல் சாப்

ஏப்ரல் 16 - லவ் ஸ்டோரி

ஏப்ரல் 30 - விராதபர்வம்

மே 13 - ஆச்சார்யா

மே 14 - நாரப்பா

ஆகஸ்ட் 13 - புஷ்பா

அக்டோபர் 13 - ஆர்ஆர்ஆர்

ஜனவரி 7 - சலார்

ஜனவரி 12 - சரக்கு வாரி பாட்டா

இன்னும் சில பெரிய படங்களின் வெளியீட்டுத் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !