ஐந்து மொழி படத்தில் நிதி அகர்வால்
ADDED : 1717 days ago
2017-ல் பாலிவுட்டில் முன்னா மைக்கேல் என்ற படத்தில் அறிமுகமானவர் நிதி அகர்வால். அதையடுத்து தெலுங்கு சினிமாவிற்கு வந்து சில படங்களில் நடித்தவர் ஜெயம் ரவியின் பூமி படம் மூலம் தமிழுக்கு வந்து சிம்புவுடன் ஈஸ்வரன் படத்திலும் நடித்தார்.
இந்த இரண்டு படங்களும் வெளியான நிலையில் தற்போது தெலுங்கில் பவன் கல்யாணின் 27ஆவது படத்தில் இணைந்திருக்கிறார் நிதி அகர்வால். சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் கிரிஷ் இயக்குகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.