உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா தயாரிப்பில் 2 ஹீரோயின்கள்

சூர்யா தயாரிப்பில் 2 ஹீரோயின்கள்

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் 14வது படத்தின் பூஜை நேற்று கோகுலம் ஸ்டூடியோவில் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தில் ஜோக்கர் ரம்யா பாண்டியன், வாணி போஜன் ஹீரோயின்கள். புதுமுக நடிகர் மிதுன் மாணிக்கம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர்களுடன் கோடங்கி வடிவேல் முருகன், செல்வேந்திரன், ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் அரிசில் மூர்த்தி. சுகுமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். பாடகர் க்ரிஷ், இந்தப் படத்துக்கு இசையமைக்கவுள்ளார். ஒரே கட்டமாக படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !