இசை கலைஞர்கள் சங்கத் தலைவராக தினா மீண்டும் தேர்வு
ADDED : 1709 days ago
தென்னிந்திய திரை இசை கலைஞர்கள் மற்றும் இசை அமைப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடந்தது. இதில் தற்போது தலைவராக உள்ள இசை அமைப்பாளர் தினா தலைமையிலான அணியினர் வெற்றி பெற்று மீண்டும் பொறுப்புக்கு வந்துள்ளனர்.
தலைவராக தினாவும், ஜோனா பக்தகுமார் பொதுச் செயலாளராகவும், மகேஷ் பொருளாளராகவும் வெற்றி பெற்றனர். தேர்தல் அதிகாரிகளாக இயக்குனர்கள் டி.கே.சண்முகசுந்தரமும், ரமேஷ் பிரபாகரனும் பணியாற்றினார்கள்.
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாளை (2ம் தேதி) சங்க கலையரங்கில் நடக்கிறது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் நடக்கும் இந்த விழாவில் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.