இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா மாநாடு?
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும். இப்படத்தின் டீசர் சிம்பு பிறந்தநாளையொட்டி இன்று வெளியாகியுள்ளது. சிம்பு ரசிர்கள் டீசரை சமூகவலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநாடு படத்தின் டீசரை பார்த்த நெட்டிசன்கள் சிலர், வாண்டேஜ் பாயிண்ட் ஹாலிவுட் படத்தின் காப்பி என விமர்சித்துள்ளனர். பீட் ட்ராவிஸ் இயக்கத்தில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாண்டேஜ் பாயிண்ட், ஒரு அரசியல் ஆக்ஷன் திரில்லர் படமாகும்.
கதைப்படி படத்தின் ஆரம்பத்தில் ஒரு மாநாடு நடக்கும். அதில் கலந்துகொள்ளும் அமெரிக்க ஜனாதிபதி சுட்டுக்கொல்லப்படுவார். இதையடுத்து அந்த மேடை வெடித்து சிதறும். அதன் பிறகு முக்கிய கதாபாத்திரங்களின் வழியே பின்நோக்கி நகர்ந்து, கொலையாளி யார் என தெரியப்படுத்துவார்கள். படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை செம திரில்லிங்காக இருக்கும்.
இந்த படத்தை தான் மாநாடு படமாக வெங்கட் பிரபு உருவாக்கி இருக்கிறார் என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். வெங்கட்பிரபுவின் முந்தைய படங்கள் மீதும் இது போன்ற விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.