மாப்பிள்ளை தேடும் ஜாக்குலின்
ADDED : 1705 days ago
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜாக்குலின். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்தவர், தற்போது தேன்மொழி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஜாக்குலின், சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர், 'எப்போது திருமணம்?' எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, “மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கின்றேன், நல்ல, அழகான மாப்பிள்ளை யாராவது இருந்தால் தயவு செய்து என்னை காண்டாக்ட் செய்யுங்கள்” என நகைச்சுவையாக தனது பாணியில் பதிலளித்துள்ளார் ஜாக்குலின்
மேலும் தனது ஆல் டைம் பேவரைட் நடிகர் தனுஷ் தான் என்றும் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ஜாக்குலின் பதிலளித்துள்ளார்.