உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐதராபாத்தைத் தொடர்ந்து மும்பையிலும் வீடு வாங்கிய ராஷ்மிகா மந்தனா

ஐதராபாத்தைத் தொடர்ந்து மும்பையிலும் வீடு வாங்கிய ராஷ்மிகா மந்தனா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா, தமிழில் சுல்தான் படத்தில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் டெட்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதோடு தற்போது ஒரு ஆசிரியரை நியமித்து ஹிந்தியும் பயின்று வருகிறார்.



இந்நிலையில், அடுத்தபடியாக பாலிவுட் சினிமாவில் தனக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை யூகித்து விட்ட ராஷ்மிகா, இதுவரை ஹோட்டலில் தங்கியிருந்து நடித்து வந்தவர் தற்போது மும்பையில் ஒரு ஆடம்பர பிளாட் விலைக்கு வாங்கியிருக்கிறார். இதேபோல்தான் இதற்கு முன்பும் ஐதராபாத்தில் ஓட்டலில் தங்கியிருந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா, பின்னர் அதேபகுதியில் ஒரு விலையுயர்ந்த வீடு வாங்கி குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !