உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அதிர்ச்சியூட்டும் மான்டேஜ் - திரும்பிப்பார்க்க வைத்த சாய் பல்லவி

அதிர்ச்சியூட்டும் மான்டேஜ் - திரும்பிப்பார்க்க வைத்த சாய் பல்லவி

தெலுங்கில் சாய் பல்லவி முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் விராட்ட பர்வம். அவருடன் ராணா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 30-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தில் இடம் பெற்றுள்ள கோலு கோலு என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலில் யதார்த்தமான கிராமத்து பெண் வேடத்தில் காணப்படுகிறார் சாய் பல்லவி. அதோடு அவரது அதிர்ச்சியூட்டும் மான்டேஜ் காட்சிகளும் இடம் பெற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதையடுத்து, இந்த படத்தில் சாய்பல்லவியின் கதாபாத்திரம் குறித்து பல்வேறு விதமான பாசிட்டிவான விமர்சனங்கள் எழுந்திருப்பதோடு, ஏற்கனவே தெலுங்கில் அவர் நடித்த பிடா படத்திற்கு இணையான இன்னொரு முக்கியமான படமாக இருக்கும் என்று இந்த டீசரை வைத்தே நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !