உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசியல் களத்தில் திரைப்பிரபலங்கள்

அரசியல் களத்தில் திரைப்பிரபலங்கள்

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிகர் போஸ் வெங்கட் அறந்தாங்கி தொகுதியில் திமுக., சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில் நேற்று இயக்குனரும், நடிகருமான ரவி மரியா, கன்னியாகுமரி, விளவங்கோடு தொகுதியில் அதிமுக., சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். இதேப்போன்று நடிகர் விமலின் மனைவி பிரியதர்ஷினி, திமுக சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !