உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாகார்ஜூனா பட டிரைலரை வெளியிட்ட சிரஞ்சீவி

நாகார்ஜூனா பட டிரைலரை வெளியிட்ட சிரஞ்சீவி

நாகார்ஜுனா தற்போது தெலுங்கில் வைல்டு டாக் என்கிற படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சாலமன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஏசிபி விஜய் வர்மா என்கிற ஒரு ரப் அன்ட் டப் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நாகார்ஜூனா. இந்தப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இருக்கிறது. நடிகர் சிரஞ்சீவி இதை வெளியிட்டுள்ளார்.

அதற்கு முன்னதாக சிரஞ்சீவிக்கும் மகேஷ்பாபுவுக்கும் இந்தப்படத்தின் டீசரை அனுப்பி வைத்துள்ளார் நாகார்ஜுனா. இருவருமே பார்த்துவிட்டு பாராட்டியதை, தான் அவர்களுடன் பேசியதை வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட்டுகளாக அவர்களின் அனுமதி பெற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நாகார்ஜுனா.

டீசர் பற்றி மகேஷ்பாபு கூறும்போது, “இப்போதுதான் டீசர் பார்த்தேன்.. பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது. அதேசமயம் கூலாகவும் இருக்கிறது” என கூறியுள்ளார்.

சிரஞ்சீவியும், “டீசர் வித்தியாசமான முறையில் எடிட் பண்ணப்பட்டு இருக்கிறது. படம் பார்ப்பதற்கு ஆர்வத்தை தூண்டுகிறது. நாளை இதை வெளியிடுகிறேன்” என கூறியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !