ரவி தேஜாவுடன் மோத 30 கிலோ குறைத்த சிங்கம் 3 வில்லன்
ADDED : 1668 days ago
சிங்கம்-3யில் சூர்யாவுக்கு வலுவான வில்லனாக நடித்தவர் தாகூர் அனூப் சிங். பிரபலமான இந்தி தொலைக்காட்சி நடிகர் மட்டுமன்றி பாடி பில்டிங்கில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு காரணமாக 75 கிலோ இருந்த இவரது உடல் எடை 105 கிலோவுக்கு ஏறிவிட்டது.
சரியாக அந்தசமயத்தில் தான் தெலுங்கில் ரவிதேஜா நடிக்கும் கில்லாடி என்கிற படத்திற்காக வில்லனை தேடி வந்தார் இயக்குனர் ராஜவர்மா. இதை நண்பர் மொலமாக கேள்விப்பட்டு தானே ஐதராபாத் வந்து இயக்குனரை சந்தித்து வாய்ப்பையும் பெற்று விட்டார் தாகூர் அனூப் சிங். அதை தொடர்ந்து மீண்டும் கடும் உடற்பயிற்சி செய்து தனது வழக்கமான உடல் எடைக்கு மீண்டு(ம்) வந்துவிட்டார் தாகூர் அனூப் சிங். இந்தப்படத்தின் கதையும் தனது கதாபாத்திரமும் கூட ரொம்பவே வித்தியாசமானது என கோரியுள்ளார் தாகூர் அனூப் சிங்.