பொண்ணு ரெடி, மாப்பிள்ளை எங்கே? - ஷெரின்
ADDED : 1662 days ago
தனுசுடன் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் ஷெரின். அதையடுத்து ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, பீமா, பூவா தலையா என பல படங்களில் நடித்தார். பின்னர் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். இதை வைத்து மீண்டும் பட வாய்ப்பு பெற உடல் எடையை குறைத்து ஸிலம் ஆனார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் மணப்பெண் போன்று தன்னை அலங்காரம் செய்து கொண்டு சேரில் அமர்ந்திருக்கும் ஒரு போட்டோவை வெளியிட்டு, பொண்ணு ரெடி, மாப்பிள்ளை எங்கே? என்று பதிவிட்டுள்ளார். அடுத்தபடியாக திருமணத்திற்கு தான் தயாராகி விட்டதையே இப்படியே வெளிப்படையாக தெரிவித்துள்ளார் செரீன்.