இயக்குனர் ஆகிறார் ஆர்.கே.சுரேஷ்
ADDED : 1653 days ago
தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். அதன்பிறகு தயாரிப்பாளர் ஆனார். தம்பிகோட்டை, சலீம், தர்மதுரை உள்பட பல படங்களை தயாரித்தார்.
பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடிப்பில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமானார். அதன்பிறகு மருது, இப்படை வெல்லும், ஸ்கெட்ச், காளி, பில்லா பாண்டி, புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் .
அடுத்த அவதாரமாக ஆர்.கே.சுரேஷ் இயக்குனர் ஆகிறார். குருபூஜை என்ற படத்தை விரைவில் இயக்க இருக்கிறார். இது பழம்பெரும் தலைவர் முத்துராமலிங்க தேவரின் தொண்டர் ஒருவரின் கதையாக உருவாக இருக்கிறது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று தெரிகிறது.