அரசியலுக்காக சினிமாவை விட்டு விலகுவேன்: கமல் அறிவிப்பு
ADDED : 1653 days ago
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருந்தவன். அரசியல் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன். அப்படிப்பட்ட நான் எந்த சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தேன் என்று எல்லோருக்கும் தெரியும். நான் மறுபடியும் நடிக்க சென்று விடுவேன் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் சட்டசபை உறுப்பினராக இருந்து கொண்டு நடித்தார். அது அவருக்கான அரசியல் போராக இருந்தது. இனி நான் நடிக்கும் படங்களுக்கு அதிக சம்பளம் வாங்கி அதனை மக்களுக்காக செலவு செய்வேன். சினிமா எனக்கு தொழில், அது அரசியலுக்கு இடையூறாக இருந்தால் சினிமாவை விட்டு விலகி விடுவேன். தற்போது ஒத்துக் கொண்டிருக்கிற படங்களில் மட்டும் நடித்து கொடுப்பேன் என்றார்.