கொரோனா 2வது அலை: சாய் பல்லவி படம் தள்ளிவைப்பு
ராணா, சாய் பல்லவி நடித்துள்ள தெலுங்கு படம் விராட பர்வம். வேணு உடுகுலா இயக்கி உள்ள இந்த படத்தில் நந்திதா தாஸ், பிரியாமணி, ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சுரேஷ் பப்லி இசை அமைத்திருக்கிறார்.
நக்சலைட் தீவிரவாதியான ராணாவை அப்பாவி கிராமத்து பெண்ணான சாய் பல்லவி வெறித்தனமாக காதலிப்பார். தன் காதலனை தேடி அவர் காட்டுக்குள் தன்னந்தனியாக பயணிப்பதே படத்தின் கதை. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. படம் வருகிற 30ந் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது கொரோனா 2வது அலை பரவல் காரணமாகவும், தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கை அனுமதி காரணமாகவும் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தை தயாரிக்கும் சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மற்றும் பாதிக்கப்படுவேரின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, திரைப்படத்தை ஒத்திவைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். சூழ்நிலை சரியானதும் படம் வெளியாகும் தேதியை அறிவிப்போம். என்று தெரிவித்துள்ளது.